Tuesday 27 July 2010

சிங்களவர்களும் தமிழர்களும் முரன்பட்டவர்கள் அல்ல. முரன்பட வைக்கப்பட்டவர்கள்.

யார் சொன்னது தழிழர்களும் சிங்களவர்களும் முரன்பாடு உடையவர்கள் என்று. இயல்பாகவே சிங்களவர்களில் பலர் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள், தமிழர்களுடன் ஒன்றாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தமிழைக்கற்பதிலும் தமிழ் பண்பாட்டைப்பற்றி அறிவதிலும் ஆர்வம் கொண்டவர்கள். தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள சுற்றுலா பயணிகளிடம் இருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களிடம் பேசும் போது தமிழ்ச்சொற்களை கற்பதில் அவர்களுக்குள்ள ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.
நான் கதைத்த சிங்கள நண்பர்கள் அனைவரும் என்னிடம் கேட்டது ”நாங்கள் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறோம் நீங்கள் சிங்களம் கற்கின்றீர்களா?” என்பதுதான்... என்னால் எதுவும் சொல்ல முடிவதில்லை... அவர்கள் தமிழ் மீது காட்டும் அக்கறையில் சிறிதும் நாம் சிங்கள மொழியில் காட்டவில்லை என்றே கூறவேண்டும். எமது பிள்ளைகள் பாடசாலையில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக கற்றுக்கொண்டு இருக்கின்றார்கள் என்று அவர்கள் கூறும் போது அவர்கள் முகற்றில் இன்பத்தை பார்க்கவேண்டும்...

அண்மையில் காலி மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம் சுற்றுலா வந்த பிக்கு ஒருவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடன் உரையாடியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அவருக்கு தமிழ் தெரியாது. அவருடன் ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி ஒருவரும் வந்து இருந்தார். அவருக்கும் தமிழ் தெரியாது, நான் அவர்களுடன் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தி்ல் உரையாடினேன். அவர்கள் என்னுடன் நன்றாக கதைத்தார்கள். அங்கு வந்த பிக்கு தமிழ்,சிங்கள மக்களிடையே நல்லினக்கத்தை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றார். தான் தமிழ் மக்களை நேசிப்பதாகவும் அவர்களில் துன்பப்படுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தான் ஆசைப்படுவதாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் நங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவது போல் நீங்களும் தென்னிலங்கைக்கு சுற்றுலா வரவேண்டும் என கூறினார்.. அதுமட்டும் அன்றி நீங்கள் காலி வந்தால் கட்டாயம் என்னிடம் வரவேண்டும் நான் தங்குமிடம் உணவு என்பன இலவசமாக தருவேன் என்றும் அவர் கட்டளையிட்டார்....

எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு நான் சிங்களவர் பற்றி இவ்வாறு கூறுவது சரியல்ல.... எனினும் இனிவரும் காலங்களில் சிங்கள மக்களுடன் அணிசேர்ந்து தமிழர்களின் உரிமையை வென்றெடுப்போம்......
எமக்காக குரல் கொடுக்க சிங்கள நட்புறவுகளை உருவாக்குவோம்..